தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கான உத்தரவையும், முன்னேற்பாடுகளையும் செய்துவருகின்றது.
குறிப்பாக தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுவை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் புயல் கரையை கடக்கும்போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.