கருணைக்கிழங்கு சில்லி ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு – 1 கிலோ
மிளகாய்த் தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சோம்பு தூள் – 1 ஸ்பூன்
பு+ண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு – 3 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கருணைக்கிழங்கை எடுத்து அதன் மேல்உள்ள தோலை நீக்கி, சதுரமான துண்டுகளாக நறுக்கியபின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்துகொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் நறுக்கிய கருணைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி அரை பதத்திற்கு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து எடுத்து கொள்ளவும்.
அடுத்தது பாத்திரத்தில் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் பிசைந்த மசாலாவில், வேகவைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்து தோசைக்கல்லைஅடுப்பில் வைத்து சூடாகியதும் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிரட்டி வைத்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கி, ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு, மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, மற்றொரு புறமும் வேக வைத்து எடுத்து, பரிமாறினால் ருசியான கருணைக்கிழங்கு வறுவல் ரெடி.