Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளித் தொல்லையிலிருந்து… விடுபட வேண்டுமா… இந்த ஆயுர்வேத சூப்பை… குடித்து பாருங்க..!!

ஆயுர்வேத சூப் செய்ய தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை           – 15
ஓமம்                                         – 2 டீஸ்பூன்,
சீரகம்                                         – 2 டீஸ்பூன்,
தனியா                                      – 2 டீஸ்பூன்,
மிளகு                                         – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள்                              – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி                                         – 1 துண்டு,
பூண்டு                                        – 4 பல்,
சோம்பு                                       – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு                                            – தேவையான அளவு,
பெருங்காயத்தூள்               – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை                            – 4,
நெய்                                           – 2 டீஸ்பூன்.

செய்முறை:

கற்பூரவல்லி இலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.  பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றியதும், கற்பூரவல்லி இலை, வெற்றிலை சிறிது சேர்த்து வதக்கி  எடுத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றியபின், அதில்  ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, சுக்குத்தூள், பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்,

பின்பு அதனுடன் கற்பூரவல்லி இலை, வெற்றிலையை சேர்த்து சிறிதளவு  தண்ணீர், உப்பு போட்டு  கொதிக்க வைத்து  நன்கு சுண்டியதும், சுத்தமாக  வடித்து எடுத்து பரிமாறினால், காரசாரமான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

Categories

Tech |