பீட்ரூட் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 1
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
முதலில் பீட்ரூட், வெங்காயம், தக்காளியை எடுத்து சிறு துண்டுகளாவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும், நறுக்கிக் எடுத்து கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், பச்சைமிளகாய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் நறுக்கிய பீட்ரூட், சிறிது உப்பு, குழம்பு மிளகாய் பொடியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும். பின்னர் வேக வைத்த கலவையானது தண்ணீர் வற்றி சுண்டியதும் இறக்கினால் சுவையான பீட்ரூட் குழம்பு தயார்.