பேரீச்சம்பழம் – 15
அத்திப்பழம் – 6
பால் – 2 கப்
பாதாம் – 10
முந்திரி – 10
அக்ரூட் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தில் உள்ள விதையை நீக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பாதாமை போட்டு, தோலை நீக்கிக் கொள்ளவும்.
அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் பேரீச்சம்பழம், பாதாம், அத்திப்பழம், முந்திரி, அக்ரூடை போட்டு ஊறவிடவும்.
மேலும் பாலில் ஊறவைத்த கலவையானது நன்கு ஆறியதும், அதில் தேன் சேர்த்து, மிக்ஸிஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தோ அல்லது அப்படியே எடுத்து குழந்தைகளுக்கு பரிமாறினால் சத்தான ஃப்ரூட் மில்க் ஷேக் ரெடி. அதன் மேல் நறுக்கிய பாதம், முந்திரிகளை தூவியும் பரிமாறலாம்.