ஜீரண இடியாப்பம் செய்ய தேவையானப் பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம்,
இஞ்சி பேஸ்ட் – சிறிதளவு
பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
மிளகுத்தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – சிறிதளவு
நெய் – 4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்து இடியாப்ப குழலில் வைத்து நன்கு பிழிந்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் பிழிந்து வைத்த மாவை இட்லி தட்டில் வைத்து நன்கு வேக வைத்து இடியாப்பமாக எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டுநன்கு வதக்கவும்.
பின்பு அதனுடன் வேக வைத்த இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால் சுவையான ஜீரண இடியாப்பம் ரெடி. இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.