ஸ்டஃப்டு பிரெட் போண்டா செய்ய தேவையான பொருட்கள் :
பெரிய பிரட் துண்டுகள் – 10
எண்ணெய் – தேவையான அளவு.stafed
ஸ்டஃப் செய்ய :
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – சிறிதளவு,
மல்லித்தூள் – சிறிதளவு,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
முந்திரி – 10
நறுக்கிய புதினா – 1 கைப்பிடி அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். பின்பு முந்திரி, வெங்காயம், தக்காளியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கியபின், தக்காளிவை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சிறிது உப்பு, மஞ்சள்தூள், புதினா, நறுக்கிய முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறியபின், இறக்கி சிறிது நேரம் ஆற வைத்து, அதை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து செய்யவும்.
மேலும் பிரெட்டை எடுத்து, நான்கு பக்கத்தில் உள்ள ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு, அதை நீரில் நனைத்து நன்கு, பிழிந்தபின், உருட்டிய மாவைஎடுத்து, பிரெட்டின் நடுவில் வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும்.
பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள போண்டாவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
சூப்பரான பிரெட் போண்டா ரெடி.