வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
அடுத்த 1அல்லது 2 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அந்த சமயத்தில் காற்றானது 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் கடந்த 6 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கு நோக்கி 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 120 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்து சென்னைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.