வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது 3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர், காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல் நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த ரயில் ஒன்று மூவர் மீதும் மோதியதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடல்கள் சிதறிக் கிடப்பதைக் கண்ட மக்கள், ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ,அங்கு சென்ற ரயில்வே போலீசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றினர்.