Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

தீவிரமடையும் புயல்… 1200 பேர்…. தேசிய பேரிடர் படையினர்… தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை..!!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. அப்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ் என் பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஒடிசா, ஆந்திரா, மற்றும் கேரளா பகுதிகளில் 800 பேரிடர் மீட்பு படையினர் விமானத்திற்கு வருகை தருவதற்கு தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |