நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிவர் புயல் இன்று மாலை காரைக்கால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடலூர் – புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories