காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் ராஜீவ் காந்தியின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர் அகமது படேல்.