ஃபால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
2 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இது சுமந்து செல்கிறது . இந்த விண்கலன், 17 ஆவது முறையாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது 4 வாரங்களுக்கு , பின்னர் பூமிக்குத் திரும்பவுள்ளது .