வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த லாவண்யா வீட்டில் இருந்த சானிடைசரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் லாவண்யா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் குடல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் விஜயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.