தாய் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில் கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர் தான் புகைக்கும் சிகரெட்டை தன் குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கொடுக்கிறார். இதையடுத்து முதலில் அந்த குழந்தை அதை ஏற்க மறுக்கிறது. மீண்டும், மீண்டும் அந்தப் பெண் Guel இழு, இழு என்று கூறி குழந்தையின் உதட்டினை மூடி வாய்க்குள் வைக்கிறார். இதன் பின்னர் அந்த குழந்தை புகையை வாய்க்குள் இழுத்து வெளியே ஊதுகிறது.
இன்னும் வேண்டுமா என்று அந்த தாய் குழந்தையை பார்த்து கேட்டு விட்டு பின்னர் தன்னுடைய மகளுக்கும் கொடுக்கிறார். ஆனால் அந்த பிள்ளை பின்னால் தள்ளி சென்று, சிரித்துக் கொண்டே நிற்கிறாள். அந்த இளம் பெண்ணும் மீண்டும் மீண்டும் அந்த குழந்தைக்கு புகைக்க கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அந்த காணொளியில் இருக்கும் பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.