செம்பரம்பாக்கம் ஏரி இன்று நண்பகல் அளவில் திறக்கப்படும் உள்ள நிலையில் சென்னை அடையாறு தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
உபரி நீரை அதிகமாக இருந்தால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். தற்போது செம்பரம்பாக்கத்தில் 22 அடி அளவை எட்டியுள்ளதையடுத்து முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அந்த உபரி நீர் என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லக்கூடிய கிராமங்களான காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம்மற்றும் அடையாறு ஆற்றினுடைய இரு புறங்களில் உள்ள தாழ்வான பகுதி ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மக்கள் எல்லாம் கடந்த முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டது கூட மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள்.
எனவே அந்த தாழ்வான பகுதிகள் இருக்க கூடிய மக்களுக்கு அச்சம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. உபரி நீர் அதிகமாக வெளியேறும் பட்சத்தில் அது குடியிருப்பு பகுதிக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதை அறிந்துதான் நிவாரண முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.