சென்னையில் முழு கொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் கரையை கடக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து 24 அடியை கொண்ட செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை தற்போது எட்டியுள்ளது. தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 230 கன அடியிலிருந்து 1.096 கன அடியாக அதிகரித்துள்ளது. அதனால் 24 அடியை கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.