தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு இன்று டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.