நபர் ஒருவர் தன் நண்பரின் மகனை தலையை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த mikheil (33) என்பவர் தன் மனைவியான Elen(36) என்பவரை பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். இதனால் தன்னுடைய 5 வயதுடைய மகனை தனது நண்பரான sergey (47) என்பவரின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பிய போது கண்ட காட்சி அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் தனது நண்பரின் வீட்டின் சமையலறையில் தன்னுடைய மகனின் உடலில் தலை இல்லாமல், உடல் மட்டும் கிடந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன mikheil இது குறித்து தனது நண்பரிடம் விசாரித்ததில், sergey தான் சிறுவனின் தலையை வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் sergey கூறுகையில், “நான் கடுமையான போதைப்பொருள் மற்றும் மதுபானத்தில் இருந்தேன். இதனால் எனக்கு என்ன நடந்தது தெரியவில்லை.
சிகரெட் பிடிப்பதற்காக நான் வெளியே சென்றேன். பின்னர் திரும்பி வந்து மீண்டும் ஒரு கப் மதுபானம் அருந்தினேன். அப்போதுதான் நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரிய வந்தது. அதையடுத்து வெளியே சென்று காவல்துறையினருக்காக காத்திருந்தேன்” என்று கூறியுள்ளார். இறந்த சிறுவனின் தாயான Elena தன்னுடைய ஆறாவது பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்றபோது தான் இந்த கொடூர செயல் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட sergeyக்கு 15 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது.