Categories
மாநில செய்திகள்

அனைத்து பெண்களுக்கும் இருசக்கர வாகனம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

அம்மா இரு சக்கர வாகனம் வாங்க பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “குமரி மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்கள், சுயதொழில், வியாபாரம், இதர பணிகள் மேற்கொள்ளும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள் செயல்படுத்துவோர், சமுதாய நல அமைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் கடைகளில் பணிபுரியும் மகளிர், பல்வேறு அரசுத் துறையில் பணி புரிவோர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் மகளிர். மேலும் வங்கி தொடர்புடைய பணிகள் பணியாற்றும் மகளிர் ஆகியோர்கள் மானியம் பெற தகுதியுடைய பயனாளிகள் ஆவர்.

அவர்களின் வயது வரம்பு கட்டாயம் 18 முதல் 45 வயது வரையிலும், ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வித் தகுதி தேவை இல்லை. இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். இவர்களின் மலைப்பகுதி மக்கள், மகளிரை குடும்பத் தலைவராக கொண்டவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், கணவனால் கைவிடப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மகளிர் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி உடைய மகளிர், ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன்களில், நகர பஞ்சாயத்து, நகரசபை மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் எனில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி அதற்கான விண்ணப்ப படிவத்தில் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்று, பணிச்சான்று, ஆதார் கார்டு நகல், கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமை காண சான்று, ஜாதி சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், இருசக்கர வாகனத்திற்கு விலைப் புள்ளி, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் மேற்பட்ட அலுவலகங்களில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |