Categories
தேசிய செய்திகள்

கோவிலில் ‘கரும்புகை, கருகும் வாசனை’ சந்தேகப்பட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… தெலுங்கானா மாநிலத்தில் அதிரவைத்த சம்பவம்..!!

கோவில் வளாகத்தில் உறவினர்களால் ஒருவர் கட்டிவைத்து தீயுடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா  மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் 38 வயதான பவன்குமார். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து பவன்குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி உடன் வந்தது பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவிலுக்கு விரைந்துள்ளனர்.

அப்போது கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரை பூட்டப்பட்ட நிலையில், கரும் புகையும், கருகும் வாசனையும் வந்துள்ளது. கிராம மக்கள் உடனடியாக அந்த கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஒரு நாற்காலி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று உள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பவன் குமாரின் மனைவி தமது சகோதரரின் மனைவி தண்ணீர் வாங்கி வர அனுப்பியதாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். பவன் குமாரை அவரது மைத்துனர் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பவன் குமாரை யார் பெட்ரோலை ஊற்றி கொளுத்தினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் மரணமடைந்த ஜெகனுக்கு, பவன் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், பவன்குமார், ஜெகன் மரணமடைய மந்திரம் செய்து வைத்தார் என்றும் அவரது குடும்பத்தினர்கள் நம்புவதாக கிருஷ்ணவேணி போலீசாரிடம் தெரிவித்தார்.

Categories

Tech |