நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது.
திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.