புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து முகாம்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.