Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் சிக்கிய லாரி ….!! .

சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தில் சரக்கு லாரி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாலத்தை உடைத்து கொண்ட கவிழ்ந்த விபத்தில் சிக்கியது. கனரக வாகனத்தை இயக்கி ஓட்டுனர் அதிக பாரத்தை ஏற்றி வந்ததாகவும் அந்த பகுதிகள் செல்ல தடை செய்யப்பட்ட நிலையிலும் லாரி ஓட்டுனர் வந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளத்தில் சிக்கிய சரக்கு லாரியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியாளர்கள் மூலமாக கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

Categories

Tech |