Categories
மாநில செய்திகள்

நகைக் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி …!!

மயிலாடுதுறை அருகே நகை கடையின் கதவை அறுத்து திருட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் கணேசன் என்பவர் நகை கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது நகை கடையின் ஷட்டரை கொள்ளையன் ஒருவன் அறுத்து  உள்ளே நுழைந்து திருட முயன்றான். அப்போது நகைக் கடையின் கண்ணாடி கதவை அறுக்கும் போது கண்ணாடி உடைந்து கொள்ளையன் கை அறுக்கப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் நகை கடைகளில் இருந்த 50  லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் கணேசன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் ரத்தகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையன் பெயர் தீபக் ஜான்லி என்பதும் காரைக்கால் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Categories

Tech |