புயல் உருவாகும் போது அதன் தன்மையை பொறுத்து துறைமுகங்களில் 1-ம் என் முதல் 11-ம் என் வரை எச்சரிக்கை குண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை குண்டுகள் என்றால் என்ன புயலின் தாக்கத்தை பொறுத்து ஏற்றப்படும் குண்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
புயல் காலங்களில் மீனவர்களுக்கும் கடலில் பயணிக்கும் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு இயற்றப்படுகிறது. பகல் நேரங்களில் கருப்பு நிறத்தோடு மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும் இரவு நேரங்களில் விளக்குகள் மூலமும் எச்சரிக்கை விடப்படுகிறது. கடலில் புயல் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டும். துரை முகங்களுக்கு பாதிக்காமல் பலமான திடீர் காற்று வீச வாய்ப்பு உள்ளது உணர்த்தும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டும். அதே போல புயல் உருவானது உறுதிப்படுத்தப்பட்டால் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இயற்றப்படும்.
3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தால் திடீர் காற்றோடு மழை பொழிய வாய்ப்பு உண்டு. துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட்டால் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டும். 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புயல் கரையை கடக்கும் திசையை குறிக்கும். இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்திற்கு இடதுபக்கத்தில் புயல் கரையைக் கடந்து செல்லும் இதேபோல 6-ஆம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கலாம். புயல் துறைமுகத்தை நேரடியாக தாக்க கூடும் என்றால் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.
அப்போது புயலால் ஏற்றப்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் புயல் தீவிர புயலாகவோ அதி தீவிர புயலாகவோ உருவெடுத்தால் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லக்கூடும். 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றும் பச்சதில் அதிதீவிர புயலானது துறைமுகத்தில் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் அதிதீவிர புயல் துறைமுகத்தின் அருகிலேயே கரையைக் கடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். வானிலை மிகவும் மோசமடைந்தால் உச்சபட்சமாக பதினோராம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை கூட உருவாகலாம்.