Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் தம்பியை கெடுப்பது நீதான்”… வேண்டா பழக்கத்தால்… சீரழிந்த குடும்பம்..!

பொள்ளாச்சி அருகே தம்பியின்  மதுப்பழக்கத்திற்கு காரணமான நண்பரை கட்டையால் அடித்து  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் வலசு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது தம்பி ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  மது குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி அண்ணன் சக்திவேல் ராம்குமாரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில்சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் அமர்ந்து ராம்குமார், தனது நண்பர் கருப்பசாமி என்பவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். இதை கண்ட சக்திவேல், தம்பி ராம்குமாரை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் கோபமடைந்த சக்திவேல் ராம்குமாரை கட்டையால் தாக்கியுள்ளார்.  பின்னர் ராம்குமார் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

மேலும், தம்பியின் இந்த நிலைமைக்கு காரணமான அவரது நண்பர் கருப்பசாமியை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அவரை அங்குள்ளவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கருப்பசாமி உயிரிழந்தார். தற்போது தலைமறைவாக உள்ள சக்திவேல், இவரது தம்பி ராம்குமார் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |