தூத்துக்குடி கடல் பகுதியில் 30 டன் ஹெராயின் மற்றும் 10 கைத்துப்பாக்கியுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியில் போது இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் படகு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த ரோந்து படையினர் படகில் இருந்த 6 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 30 டன் ஹெராயின், 10கைத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவில் நுழைய முயன்ற போது படகு பறிமுதல் செய்யப்பட்டது.
Categories