பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பேசிய பிரதமர் இம்ரான்கான் பாலியல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ரசாயன முறையில் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு சில அமைச்சர்கள் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவோரை நடுத்தெருவில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதியாக ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்ற தண்டனைக்கு பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.