நிவர் புயல் சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர், கடலூரில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ளது. நிபர் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு புதுவை அருகே கரையை கிடைக்கக்கூடும். தற்போதைய நிலவரப்படி புயல் கரையை கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் அதனுடைய வலுவானது 6 மணி நேரத்துக்குள் தொடரக்கூடும். அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சூறாவளி காற்றானது மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில், சமயங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை காற்று வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.திருச்சி சேலம் நாமக்கல் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும்
இந்த பலத்த, மழையின் காரணமாக குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம், விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படலாம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் பாதிக்கலாம், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ கூடிய நிலை ஏற்படும். வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் போன்ற மரங்கள், தோட்டப்பயிர்கள் பாதிக்கலாம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.