Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தாலியை கழட்டி வீசியதால்” காதல் கணவர் எடுத்த முடிவு…. கழுத்தை அறுத்த மனைவி…. அடுத்தடுத்த சம்பவம்…!!

காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நண்பர்களுடன் செல்போனில் பேசுவதில் ஆரம்பித்து, குடும்பத்தினர் தன்னை பற்றி விமர்சிப்பது வரை கணவர் விஷ்ணுவிடம் குறை கூறியுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த ஷாலினி தன் கணவர் கட்டிய தாலியை கழற்றி வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த விஷ்ணு தனது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நீண்ட நேரம் போராடி கதவை திறந்து பார்த்தபோது விஷ்ணு சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை தாங்கிக்கொள்ள முடியாத ஷாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் சாலினி மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஷாலினிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |