மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் அடையார், திருவான்மியூர் கடற்கரையிலும் மழைநீர் கடற்கரையை ஒட்டியே தேங்கியுள்ளதால் மெரினாவில் வெள்ள காடுபோல் காட்சியளிக்கிறது.