Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கத்தரிக்காயில்… ருசிகரமான சுவையில்… புதுவிதமான டிஸ் செய்யலாம்..!!

கத்தரிக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்                   – 6 . வட்டமாக அரிந்து கொள்ளவும் .
மிளகாய் தூள்                – 1 1/2 ஸ்பூன் .
உப்பு                                    – ருசிகேற்ப.
கடலை மாவு                  – 1 1/2 ஸ்பூன் .
சோம்பு தூள்                    – 1 ஸ்பூன்
எண்ணெய்                       – தேவைகேற்ப

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் கத்திரிக்காயை எடுத்து வட்ட வட்டமாக வெட்டிய பின்பு தண்ணீரீல் சுத்தம் செய்து நன்கு வடித்து எடுத்து கொள்ளவும்.

பின்பு கழுவிய கத்தரிக்காயுடன், மிளகாய் தூள், சிறிது உப்பு, கடலை மாவு, சோம்பு தூள் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து 1௦ நிமிடம் ஊறவைக்கவும்.

மேலும் தோசை கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்த கத்தரிக்காயை தோசை கல்லில் வைத்து,  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த கத்தரிக்காய் நன்கு சிவந்ததும் சில நிமிடத்தில் திருப்பி போட்டு வேக வைக்கவும். பின்பு நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாரினால், சுவையான கத்தரிக்காய் வறுவல் தயார் ரெடி.

Categories

Tech |