Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய  இருவர் கைது !!!

திருப்பூரில்,  மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய   இரு வாலிபர்கள்  பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது .

ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில்  இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக  நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம்  அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் .

arrest க்கான பட முடிவு

இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் மற்ற  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள்  சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய போது  அவர்கள்  சிதம்பரத்தை சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பது தெரியவந்தது .

Categories

Tech |