Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ப்ரெடை சாப்பிட பிடிக்கவில்லையா ? அப்போ இந்த ரெசிபிய… ட்ரை பண்ணி பாருங்க..!!

ப்ரெட் புட்டு செய்ய தேவையான பொருட்கள்

ப்ரெட்              – 3 ஸ்லைஸ்
தேங்காய்      – கால் கப்
உப்பு                – சிட்டிகை
தண்ணீர்       – 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில்  ப்ரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கியபின்,  மிக்ஸிஜாரில் போட்டு பொடியாக  அரைத்துக் எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காயில் உள்ள துண்டுகளை எடுத்து மிக்ஸிஜாரில்  போட்டு உதிரியாக அரைத்து எடுத்து  கொள்ளவும்.

பின்னர்  ஒரு பாத்திரத்தில் உதிர்த்த ப்ரெட்டை போட்டு,சிறிது தண்ணீர் தெளித்து,  புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து  கொள்ளவும்.

அதனை அடுத்து  புட்டு குழலை எடுத்து, அதில் தேங்காய் துருவலை வைத்ததும், அதன் மேல் ப்ரெட் தூள் வைக்கவும். இப்படி குழலில், தேங்காய் துருவல், பிரட் தூள்களை வைத்து முழுவதுமாக நிரப்பி கொள்ளவும்.

பின்பு பிரட் தூள், தேங்காய் துருவலை நிரப்பி வைத்த புட்டு குழலை அடுப்பில் வைத்து, சில நிமிடங்கள் ஆவியில் நன்கு வேக வைத்து எடுத்து பரிமாறினால் ருசியான  ப்ரெட் புட்டு தயார்.  இந்த பிரட் புட்டை சூடாக வாழைப் பழத்துடன் பரிமாறலாம்.

Categories

Tech |