திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன உடை அணிந்து, டாட்டுக்கள் போட்டுக்கொண்டு மார்டனாக வலம் வந்தவர். இதனை கணவன் வீட்டார் விமர்சித்துள்ளனர்.
மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஒரு மாதத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திங்களன்று ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் கட்டிய தாலியை கழட்டி அவர் முகத்திலேயே எறிந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஷ்ணு அவர் அறைக்குச் சென்று கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்தார். தற்போது ஷாலினி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.