கொத்தமல்லி சிக்கன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ
சிவப்பு மிளகாய் – 6
தனியா – 1 கை
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மைதா மாவு – 2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி – 1/2 கட்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
புளி – 1/2 எலுமிச்சை அளவு
செய்முறை:
முதலில் மிளகாய், தனியாவை எடுத்து மிக்சிஜாரில் போட்டு தனித்தனியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.பின்பு பாத்திரத்தில் சிக்கனை துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மேலும் பாத்திரத்தில் புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
அதன் பின்பு மற்றோரு பாத்திரத்தை எடுத்து,அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், அரைத்த தனியா, மிளகாய், சிவப்பு.மிளகாய் பேஸ்ட், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகத்தூள், புளி கரைசல் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில்சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கலந்து வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வேகும் வரை கிளறி விடவும்.
பிறகு வேக வைத்த சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகு தூள் தூவி நன்கு கிளறி விட்டு, சிறிது நேரம் வைத்து இறுதியில் கொத்தமல்லிதழையை தூவி பரிமாறினால் சுவையான கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெடி..