நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சில பகுதிகளுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயலசீமா மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில் தெலுங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உடனே மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையை சேர்ந்த மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.