புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்னதாக சென்னை, திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.