சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக இளைஞரணி நேரில் சென்று உதவி வருகிறது.
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தொடர் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் புயலின் எதிரொலியாக சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் பாஜக இளைஞர் அணியினர் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி வருகின்றனர். இதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் முருகன் இரண்டு நாட்களுக்கு வேல் யாத்திரையை ரத்து செய்து களப்பணி ஆற்ற செல்வோம் என்று கூறியிருந்த நிலையில், பாஜகவினர் கலப்பு புகுந்துள்ளனர்.