காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன 30 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் காணவில்லை என தகவல் வெளியாகியது. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 30 மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை வரும்முன் கடலுக்குள் சென்ற அவர்கள், கோடியக்கரை கடல் பகுதிக்கு அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளது.