இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுகின்றன.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது . கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களிலும் , விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்ததையடுத்து போலீசாரும் ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர் .
சோதனைக்கு பின் , ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்த தெரிவித்த நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது .போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.