Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

‘டி.வி பார்க்காமல் வேலைய பாரு’ பெற்றோரின் கண்டிப்பு… மாணவியின் முடிவு..!!

வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, வடக்கு நல்லூரை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது மகள் 17 வயது கவி பாரதி. கவி பாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |