Categories
சினிமா தமிழ் சினிமா

என் நண்பன் இப்போது என் எதிரி… விஷாலுக்கு வில்லனான ஆர்யா …!!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் இவர்கள்  இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இதையடுத்து  தற்போது  ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துவரும் திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘எனிமி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் நடிகர் விஷால் இந்த டைட்டில் குறித்து ‘என்னுடைய நண்பன் ஆர்யா இப்போது எனது எதிரி’ என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |