சென்னையில் புயல் காரணமாக இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை சூழலுக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது புயலின் வெளிச்சுற்று பகுதியை கரையைத் தொட்டுள்ள நிலையில், சென்னையில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.