வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை நன்றாக பெய்துள்ளது.
அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது .
அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை பலத்த சூறைக் காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது .விருதுநகரிலும், மல்லாங்கிணறு, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை நல்ல மழை பெய்துள்ளது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும், இடியுடன் மழை பெய்ததது .இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் .