‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ என நடிகை குஷ்பூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவர் புயல் கரையை கடக்க இருக்கின்றது. புயலின் வெளிப்புறம் கடலூர் கரையை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2020 இல் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். பொருளாதார ரீதியாக, மன ரீதியாக, வாழ்வாதார ரீதியாக, அது போதாது என்று இந்த நிவர் புயல். இது பெரிய புயலாக வந்திருக்கு. ஆகவே தயவுசெய்து வெளியே போகாதீங்க. ஒவ்வொரு தடவையும் தமிழகத்தில் புயல் வரும்போது எத்தனையோ பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நமக்கு தெரியும்.
அவங்களுடைய வாழ்க்கையே மாறுது. பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினைகளிலிருந்து மீண்டும் திரும்பி வருவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகிறதுனு நமக்கு தெரியல. இந்த புயல் அந்த அளவுக்கு பாதிக்க கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.
உங்க எல்லார்கிட்டயும் ஒரு சின்ன வேண்டுகோள் பிரார்த்திக்கும் போது தயவு செஞ்சு மத்தவங்கள பத்தி யோசிச்சு, ஒரு தடவை அவங்க நல்லா இருக்கணும் பிராத்தியுங்க. தமிழ்நாடு, புதுச்சேரி, இராணிப்பேட்டை, வேலூர், கடலூர், கடல் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சேர்த்து கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க.
இன்னொரு ஒரு பாதிப்புக்கு நாம் தாங்கும் சக்தி இல்லை. கடவுள் ஏதோ கோவமா இருக்காரு. அந்த கோபம் தான் இது எல்லாமே. சரியாகிவிடும் நம்பிக்கையோடு இருங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் தயவு செஞ்சு வெளியே போகாதீங்க. உங்களுக்காக மட்டுமல்ல உங்க வீட்டுல இருக்குற எல்லாருக்காகவும் வீட்டில் இருங்க.
புயல் போனதுக்கு பிறகு தான் காற்று ரொம்ப அழுத்தமாக இருக்கும். வெளியில் போகாமல் வீட்டிலேயே இருங்க. அது தான் உங்களுக்கு நல்லது, உங்க வீட்ல இருக்கிறவுங்களுக்கு நல்லது. இந்த பிரச்சனையை தாண்டி வர தைரியம் நமக்கு இருக்கு. எந்த பிரச்சினையும் சந்திக்க வெளியே போயிடாதீங்க என வீடியோ வெளியிட்டுள்ளார்.