Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை “வீட்டிற்குள் பாம்பு” அரசு புது வித அறிவிப்பு…!!

மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் வந்தால் அவற்றை அடித்து கொல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டதால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மழையின் காரணமாக வீடுகளின் முன்பு அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் வீடுகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் வரக்கூடும் என்பதால் அவற்றை கண்டு மக்கள் அச்சமடையவோ, அடித்துக்கொல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட பாம்புகளில் 4 வகைகள் மட்டுமே ஆபத்தானவை. மேலும் பாம்புகள் வந்தால் 044-222003345 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |