Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சினிமாவில் சாதனை செய்த ‘புட்ட பொம்மா’ பாடல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படத்தின் பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகவும் நடித்திருந்த ‘அல வைகுந்தபூர்ரமுலூ’ திரைப்படம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது . இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புட்டபொம்மா’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது .

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 2 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் வீடியோ பாடல் பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது. தற்போது இந்தப் பாடல் 450 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தலான சாதனையை  படைத்துள்ளது. இதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |