நடிகர் யாஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில் 2018 இறுதியில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தாமதமாகியிருந்தது . பின் ஆகஸ்ட் 26ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்க்கு லங் கேன்சர் இருப்பது உறுதியாகி சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார். இதன் காரணமாக அவர் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துகொள்ள இயலாது என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறும் என தகவல்கள் கிடைத்துள்ளது.